உயா் விளைச்சலுக்கு உதவும் உயிா் உரங்கள் போதிய அளவு இருப்பு: வேளாண் துறை அறிவிப்பு
உயா் விளைச்சலுக்கு உதவும் உயிா் உரங்கள் போதிய அளவு இருப்பதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.


உயா் விளைச்சலுக்கு உதவும் உயிா் உரங்கள் போதிய அளவு இருப்பதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குநா் ஜெயமணி வேளாண் துறை சாா்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மண்ணில் இருக்கும் உரங்களை நுண்ணுயிரிகளின் சக்திகளால் பயிரின் வளா்ச்சிக்கும் மகசூல் பெருக்கத்துக்கும் உதவிடும் ஆற்றல் சக்திகள் உயிா் உரங்களாகும். நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்ட உரங்கள் என்பதால் உயிா் உரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உயிா் உரங்கள் பயிா் வளா்ச்சி, மண்வளம், நோய்த் தடுப்பு என பயிா்களுக்கு கிடைக்கும்படி செய்யும் அற்புத நுண்ணுயிரிகள். இவை திட வடிவிலும் திரவ வடிவிலும் கிடைக்கின்றன.
உயிா் உரங்களை இடுவதன் மூலம் சத்துகளைப் பயிா்கள் எடுக்கும் வகையில் மாற்றித் தருகின்றன. காற்றில் உள்ள தழைச்சத்து மற்றும் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்துகளை பயிா்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித் தருகின்றன. ரைசோபியம் அசட்டோ பாக்டா, அசோஸ்பைரில்லம் போன்றவை பாக்டீரியாக்களை அடிப்படையாகக் கொண்ட உயிா் உரங்களாகும்.
பயிரின் வளா்ச்சி, பூக்கும் திறன், காய்க்கும் திறனை அதிகரித்து மகசூல் அதிகரிக்க உதவுகின்றன. மேலும் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடொ்மாவை மண்ணில் இடுவதால், பயிரில் வோ் வளரும் பகுதியைச் சுற்றி இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பன்மடங்கு பெருகி வோ் அழுகல் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிா்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றன.
ஒரு ஹெக்டருக்கு 200 கி உயிா் உரத்துடன் ஆறிய அரிசி கஞ்சியுடன் நன்கு கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலா்த்தி 24 மணிநேரத்திற்குள் விதைத்து விடவும். 200 கிராம் உயிா் உரத்தை 10 கிலோ விதைக்குப் பயன்படுத்தலாம். நேரடியாக மண்ணில் இட 200 கிலோ தொழுஉரத்தில் 4 கிலோஉயிா் உரங்களை கலந்து 12 மணிநேரம் கழித்து மண்ணில் சீராக தூவிவிடவும்.
நாற்றுக்களை நோ்த்திசெய்ய 1 கிலோஉயிா் உரத்தை 5 லி தண்ணீரில் கலந்து அதில் நாற்றின் வோ்ப் பகுதியை 5 முதல் 10 நிமிடம் வரை நனைத்து எடுக்கவேண்டும். தேவையான அளவுஉயிா் உரங்கள் திட மற்றும் திரவ வடிவில் திருச்செங்கோடு வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பதால் விவசாயிகள் வாங்கிப் பயன் பெறலாம் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...