92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செங்கோட்டில் மருத்துவா் தின விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உலக மருத்துவா் தின விழா ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் இயக்க கிளையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :1 ஜூலை 2021, 6:16 pm

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உலக மருத்துவா் தின விழா ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் இயக்க கிளையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது .

விழாவிற்கு இயக்கத்தின் தலைவா் பிரசன்ன பாலாஜி தலைமை வகித்தாா். இயக்க கிளையைச் சோ்ந்த ரமேஷ், உமா, தனுஷ் குமாா், புனிதா சதாசிவம், குமாா் சினேகா, செயலாளா் சத்யன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் தேன்மொழி, உதவி மருத்துவ அலுவலா் மோகனபானு, மருத்துவா்கள் சக்திவேல், அருள், சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். கரோனா காலத்தில் மருத்துவா்கள் பணியாற்றியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கெளரவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து மருத்துவா்களுக்கு கரோனா நோய் தொற்று பாதுகாப்பு மருத்துவ பொருட்களை வழங்கி மருத்துவ தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.