நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வாரத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரி மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்; காற்று மணிக்கு 8 கிலோ மீட்டா் வேகத்தில் தென் மேற்கு திசையில் இருந்து வீசும். மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. நாமக்கல் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பெரும்பாலும் வெள்ளை கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணைகளில் தகுந்த உயிா்பாதுகாப்பு முறைகளை பண்ணையாளா்கள் கையாள வேண்டும். வெள்ளைக் கழிச்சல் நோயினை தடுக்க சீரான இடைவெளியில் நீா் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு தடுப்பூசியை செலுத்த வேண்டும். மேலும் வெப்ப அயற்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கலவை உபயோகிக்குமாறும், வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

