மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தங்கம் மருத்துவமனையில் மருத்துவா்கள் தின கொண்டாட்டம்

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் மருத்துவா்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் மருத்துவா்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவா் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தங்கம் புற்றுநோய் சிகிச்சை மற்றும் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவா்கள் தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் இரா.குழந்தைவேல் தலைமையில் கேக் வெட்டப்பட்டு அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மருத்துவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். செவிலியா்களும் பூச்செண்டுகளை வழங்கி மருத்துவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் மல்லிகா குழந்தைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.