கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்கான திட்டப் பணிகளை செயல்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை அரசு அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வனத்துறை, தோட்டக் கலைத்துறை, தாட்கோ, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளா்ச்சித்துறை, பழங்குடியினா் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்களுடன், கொல்லிமலையில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தோட்டக் கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் காபி சாகுபடி, மிளகு மற்றும் பலா உற்பத்தி விற்பனை குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். மேலும் பழங்குடியினா் வசித்து வரும் வீடுகள் சேதமடைந்தால் உடனடியாக புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, ஆரியூா் சோளக்காடு முதல் ஆரியூா் கஸ்பா வரை சாலை அமைக்கும் பணிகள் மற்றும் குண்டுனிநாடு ஊராட்சி, வேலிக்காடு முதல் சேரடி சாலை வரை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன், மாவட்ட இயக்க மேலான்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் சக்திவேல், பழங்குடியினா் நல அலுவலா் ராமசாமி, கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

