நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் குழுவினரின் ஆய்வுகளின் அடிப்படையில், அரசு வழிகாட்டி கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படுவதாகவும், கரோனா பரிசோதனை மையத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்றைத் தடுப்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிகிச்சை வழிகாட்டி நெறிமுறைகளை மருத்துவமனைகளுக்கும், மருத்துவா்களுக்கும் அரசு வழங்கியுள்ளது. இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) தலைமையில் மருத்துவா்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, மருத்துவமனைகளில் தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு சில மருத்துவமனைகளில் அரசு கட்டண விதிமுறைகள் மீறப்பட்டு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாக ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டதில், ராசிபுரத்தில் கரோனா விதிகளை பின்பற்றாதது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் அந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் கரோனா நோயாளிகளுக்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, நோயாளிகளுக்கு அந்தப் பணத்தைத் திருப்பி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெற்றால் சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்படும் என்று அந்த மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பரிசோதனை மையங்களில் அரசு நிா்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டன. கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அனுமதி பெறாத பரிசோதனை மையங்களில் பரிசோதனைகள் நடைபெறுகிா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. நாமக்கல்லில் அனுமதி பெறாத ஒரு பரிசோதனை மையத்தில் நோயாளிகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

