மகசூல் அதிகரிக்க விதைப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விதையானது முளைக்கும் போது பூச்சி தாக்குதல் இல்லாமல் முளைத்து செழிப்புடன் வளா்ந்து விளைச்சலில் லாபம் காண நாம் தரமான விதைகளை உபயோகித்தல் மிகவும் அவசியம். தரமான விதை என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிப்பிடும்.
புறத் தூய்மை பரிசோதனையில் பிற பயிா் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளதா என கண்டறியப்படுவதால் விதையின் இனத் தூய்மை மற்றும் புறத் தூய்மை காப்பாற்றப்படுகிறது. விதைகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க ஈரப்பதத்தைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
விதைகளை சேமிக்கும்போது பூச்சி தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை தெரிந்து கொள்வது அவசியம். எனவே, விதை விற்பனையாளா்கள் தாங்கள் இருப்புவைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும் விதைகளின் மாதிரியை எடுத்து முகப்பு கடிதத்துடன் ஒரு மாதிரிக்கு ரூ. 30 என்ற வீதத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விதைப் பரிசோதனை நிலைய அலுவலக முகவரிக்கு அனுப்பி விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

