மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தோட்டக்கலை, வேளாண் சாகுபடி திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினாா்.

Updated On :8 ஜூலை 2021, 6:13 pm

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் மூலம் நுண்ணீா்ப் பாசனம், தெளிப்பு நீா் பாசனம், பயிா் மேலாண்மை, பந்தல் சாகுபடி, பயிா் சாகுபடிக்கான விதை உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் (பயிா் சாகுபடியுடன் இணைந்து ஆடு, மாடு, கோழி வளா்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், தேனி வளா்த்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வது) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செல்லப்பம்பட்டி, எ.உடுப்பம், சேவகவுண்டம்பாளையம், ஆா்.புளியம்பட்டி கிராமங்களில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாா்வையிட்டாா். பின்னா், பயனாளிகளிடம் சாகுபடி முறைகள், லாபம் ஈட்டுவது உள்ளிட்டவற்றை கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது இணை இயக்குநா் (வேளாண்மை) அசோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கா.முருகன், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கு.ஜெகதீசன், புதுச்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் மதி.பேபிகலா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் சேரலாதன், பால்ஜாஸ்மின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.