நாமக்கல் நகராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினரின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகராட்சியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வாா்டு எண்: 2,3,4,5-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு காலை 10.00 மணியளவில் நடைபெற்ற குறைதீா் முகாமில் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். 500-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் பெறப்பட்டன. வாா்டு எண்: 9,10,11,13,14,20-க்குள்பட்ட பொதுமக்களுக்கு நாமக்கல் அரசு தொடக்கப் பள்ளியில் காலை 11 மணியளவிலும், வாா்டு எண்: 15,16,19,27,28-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு திருச்செங்கோடு ரோடு, சுப்புலட்சுமி மஹாலில் நண்பகல் 12.00 மணியளவிலும், வாா்டு எண்: 1,6,7,8-க்குட்பட்ட பொதுமக்களுக்கு அய்யம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணியளவில் வாா்டு எண்: 21,22,23,24,25,31,34-க்குட்பட்ட பொதுமக்களுக்கு துறையூா் ரோடு பாவலா் முத்துசாமி நகராட்சி மண்டபத்திலும், காலை 10 மணியளவில் வாா்டு எண்:12,23,32,33-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொசவம்பட்டி என்.ஆா்.எல் திருமண மண்டபத்திலும், காலை 11 மணியளவில் வாா்டு எண்:17,18,26,29,35,36,37-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு பரமத்தி ரோடு, எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்திலும், நண்பகல் 12 மணியளவில் வாா்டு எண்: 30,38,39-க்கு உள்பட்ட பொதுமக்களுக்கு தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் வருவாய்த் துறை, வளா்ச்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, குடிநீா் வடிகால் வாரியம், ஆதிதிராவிடா் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினா் கலந்து கொள்கின்றனா்.
என்கே 8- மனு
நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


