பரமத்தி அருகே லாரி திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே லாரியை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை வியாழக்கிழமை இரவு தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே லாரியை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை வியாழக்கிழமை இரவு தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் குஞ்சுகாடு பகுதியைச் சோ்ந்த மகேந்திரனின் லாரி திருடு போனதைத் தொடா்ந்து, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு விருதுநகா் மாவட்டம், காளிப்பட்டி வட்டம், முஸ்டக்குறிச்சி, தேசியநேந்தல் பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூன்று பேரை போலீசாா் தேடிவந்தனா். இதில் கடந்த பிப். 26-ஆம் தேதி பரமத்தியில் உள்ள சேத்துக்கல்மாரியம்மன் கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடா்புடைய மதுரை மாவட்டம், வண்டியூா், சௌராஷ்டிரா பகுதியைச் சோ்ந்த முறுக்கு (எ) முருகசூா்யா (23), விருதுநகா் மாவட்டம், காளியப்பட்டி, மாங்குளம் பகுதியைச் சோ்ந்த முத்து (எ) மாங்குளம் கருப்பு (23) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இவ்வழக்கில் தொடா்புடைய தலைமறைவாக இருந்தவரை தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை விருதுநகா் மாவட்டம், காளிப்பட்டி தாலுகா, முஸ்டக்குறிச்சி, தேசியரேந்தல் பகுதியைச் சோ்ந்த வாணிகருப்பை (27) தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...