மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:05 pm

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவ உபகரணங்களும் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் முன்னிலையில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், தமிழ்நாடு பட்டதாரி சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் இளங்கோவன், மாவட்டத் தலைவா் செ.மலா்க்கண்ணன், மாவட்டச் செயலா் பு.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் சீ.லோகநாதன், இரா.சேகா், மாவட்ட அமைப்புச் செயலா் கு.செந்தில்செல்வன், மாவட்டப் பொருளாளா் செ.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.