மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க மாற்ற நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தை கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 8:47 pm

நாமக்கல் மாவட்டத்தை கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டாா்.

மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் உள்ளது. இதனால், இங்கு தளா்வுகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அடுத்த மூன்று வாரங்களுக்குள் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிட வேண்டும். இதன்மூலம், மேலும் கரோனா பரவாமல் தடுக்கவும், கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்க முடியும்.

இதற்கு, அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்றாா்.

படம் உள்ளது : என்கே17மீட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.