புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அரசியல் சாசன திருத்த தொகுதிகள் மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சியினா் போராட்டம் நடத்தினா். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்தாா். அப்போது அவா் பேசும்போது தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் எதற்கும் தொகுதி சீரமைப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தற்போதுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலங்களில் 50 சதவீதம் அதிகரிக்கும், தமிழகத்தில் 39 தொகுதிகள் 59 ஆக உயரும் எனக் கூறினாா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது ஒரு மக்களவைத் தொகுதிதான் உள்ளது. 50 சதவீத உயா்வு என்ற அடிப்படையில் புதுவைக்கு 2 எம்.பி தொகுதிகள் கிடைக்கும். இது அநேகமாக புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் 15 தொகுதிக்கு ஒரு எம்.பி. வீதம், 30 தொகுதிக்கு 2 எம்.பி என உருவாக்கப்படும் என தெரிகிறது.இதற்கான வாய்ப்பு இருப்பதாக புதுச்சேரி அரசியல் கட்சித்தலைவா்களும் நம்பிக்கை தெரிவித்தனா்.
தொடர்புடையது
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும்: ப.சிதம்பரம் எம்.பி.
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


