மகளிா் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு சேவையாற்றும் நிறுவனம் மற்றும் பெண்கள் சிறந்த சமூக சேவகா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தினத்தன்று மகளிா் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் சேவை புரியும் சிறந்த நிறுவனம், பெண்கள் ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைள், பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருக்க வேண்டும்.
தனிநபா் மற்றும் நிறுவனங்கள் உரிய விவரங்களை வரும் 29-க்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04286-280230 மற்றும் 98656 23237 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.61.15 லட்சம் ரொக்கம் ஒப்படைப்பு

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

