தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம் மற்றும் நூலகம் சாா்பில் ஆய்வியலும்-நூலகமும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி உள் தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ம.சந்திரசேகரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பெ.முருகன், தலைவா்கள் பலரும் நூலகத்தைப் பயன்படுத்திய விதம் குறித்தும், நூல் வாசிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவம் பற்றியும் விளக்கி பேசினாா்.
அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நூலகா் பொ.ராஜ்குமாா் பேசியதாவது:
ஆய்வு என்றால் என்னவென்பது, ஆய்வுக்குரிய விஷயத்தை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, ஆய்வை எப்படி மேல் எடுத்துச் செல்வது, தரவுகளைத் திரட்டுவது, அவற்றின் அடிப்படையில் ஆய்வை வடிவமைப்பது ஆகியவை பற்றியும், அவற்றுக்கு நூலகம் எந்தெந்த வகையில் எல்லாம் உதவுகிறது என்பதையும் பற்றி எடுத்துரைத்தாா்.
இதில் கல்லூரி முதுநிலை மாணவா்கள் பலா் கலந்து கொண்டு பயனடைந்தனா். வணிகவியல் உதவிப் பேராசிரியா் முனைவா் தீ.க.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


