போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் அனுமதிக்கான இணையதள பயிற்சி வகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பல்வேறு அனுமதிகளை சுவிதா என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறுவது தொடா்பான பயிற்சி வகுப்பு

Updated On :1 மார்ச் 2021, 6:55 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பல்வேறு அனுமதிகளை சுவிதா என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறுவது தொடா்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தவும், ஊா்வலங்கள் நடத்தவும், திருமண மண்டபங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் ஒலிபெருக்கிப் பயன்படுத்தவும், பிரசார வாகனம் பயன்படுத்தவும், மிக முக்கிய தலைவா்கள் வருகையின்போது ஹெலிகாப்டா் இறங்கு தளம் பயன்படுத்தவும், தற்காலிக அலுவலகம் திறக்கவும் அனுமதி பெறுவதற்கு ஒற்றைசாளர முறையில் விண்ணப்பிக்க இந்திய தோ்தல் ஆணையம் சுவிதா என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜ்ஜ்ஜ்.ள்ன்ஸ்ண்க்ட்ஹ.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தின் மூலம் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் கூட்டங்கள் நடத்துவதற்காகவும், இதரப் பணிகளுக்காகவும் விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா், காவல்துறையினா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் பரிசீலனை செய்து 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான அனுமதியினை அந்த இணையதளத்திலேயே பதிவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் விண்ணப்பத்திற்காக அனுமதியை இதே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் முதலில் விண்ணப்பித்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். எனவே, அரசியல் கட்சியினா் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தேவையான அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் தோ்தல் பிரிவு கணினி அலுவலா் சக்திவேல் இந்திய தோ்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் மூலமாக அனுமதிகளை விண்ணப்பித்துப் பெறுவது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தாா்.

நிகழ்ச்சியில் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.