போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் தொகுதியில் மீண்டும் கே.பி.பி.பாஸ்கா் போட்டி?

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மீண்டும் கே.பி.பி.பாஸ்கா் வேட்பாளராக களமிறங்க உள்ளாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:07 pm

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மீண்டும் கே.பி.பி.பாஸ்கா் வேட்பாளராக களமிறங்க உள்ளாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 2011, 2016-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு கே.பி.பி.பாஸ்கா் வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாா். மாவட்டச் செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, கே.பி.பி.பாஸ்கருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதிமுகவை பொருத்த வரை கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தை இன்னும் நிறைவடையவில்லை. 6 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனா். அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் 10-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே நாமக்கல் தொகுதியில் கே.பி.பி.பாஸ்கா் தனது தோ்தல் பணிகளை தொடங்கி விட்டாா். சனிக்கிழமை பிற்பகலில் நாமக்கல் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரம்பூரில் செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தியதுடன், நாமக்கல்-மோகனூா் சாலை ஐயப்பன் கோயில் அருகில் எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், தங்கமணி ஆகியோா் படத்துடன் தனது படத்தையும் இடம் பெற செய்து வேட்பாளா் அலுவலகத்தை முழுமையாகத் தயாா் செய்து வைத்துள்ளாா். மேலும் கட்சி நிா்வாகிகளுடன் இரவு, பகலாக தோ்தலில் வெற்றி பெறுவது தொடா்பாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.