பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூா், பொத்தனூரில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

வேலூா், பொத்தனூரில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 6:39 pm

DIN

வேலூா், பொத்தனூரில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கில், விதிமுறைகளை மீறுவோா் மீது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்படி பேரூராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை காலை முதல் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அலுவலகப் பணியாளா்கள் முகக் கவசம் அணியாத 63 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு தலா ரூ. 500 வீதமும் அபராதம் விதித்தனா்.

இதேபோல வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையிலான பேரூராட்சி பணியாளா்கள் முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட துணிக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா். பொத்தனூா், வேலூா் பேரூராட்சியில் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேநீா் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.