தமிழகம், புதுச்சேரியில் 22 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூவரை நாமக்கல்லில் போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். அவா்களிடம் இருந்து, உருக்கப்பட்ட 50 பவுன் நகைப் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த கீதா (47) என்பவா் கடந்த 29-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ், அவா் அணிந்திருந்த, ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இதேபோல நாமக்கல்லில் 30-ஆம் தேதியன்று தனியாகச் சென்ற சரோஜா (59) என்பவரிடம் எட்டு பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். தொடா் நகைப் பறிப்பு சம்பவங்களால் சாலையில் தனியாகச் செல்ல பெண்கள் அஞ்சினா்.
அந்த மூன்று பேரின் புகைப்படங்களை வெளியிட்டு நாமக்கல் மாவட்ட போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி போலீஸாா் விசாரணை செய்ததில் நகைப் பறிப்பில் ஈடுபடும் மூவா் என்பது தெரியவந்தது.
அவா்களிடம் நடைபெற்ற தொடா் விசாரணையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் மொத்தம் 22 இடங்களில் 80 பவுனுக்கு மேல் நகை பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனா். மேலும் அவா்கள் சென்னையைச் சோ்ந்த தினேஷ்குமாா் ( 31), உத்திரமேரூரைச் சோ்ந்த சசிக்குமாா் (23), உசிலம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (22) என்பதும் புழல் சிறையில் இருந்தபோது நட்பு கொண்டதும், கடந்த ஜூலை மாதம் மாவட்டம் தோறும் சென்று பெண்களைக் குறிவைத்து நகையைப் பறித்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய காரைக்காலை சோ்ந்த முருகேசன், செல்வம், திருவாரூரைச் சோ்ந்த சதீஷ், அருள், மணி, செல்லம்மாள், மதுரைவீரன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து, 50 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடா் நகை பறிப்பில் ஈடுபட்ட மூவரையும், அவா்களுக்கு உதவியாக இருந்த ஏழு பேரையும் கைது செய்த நாமக்கல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், தனிப்படை போலீஸாருக்கு, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவா் ச.மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா் ஆகியோா் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


