தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மோகனூரில் வெள்ள பாதிக்கும் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

மோகனூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.ந.மகேஸ்வரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :12 நவம்பர் 2021, 6:28 pm

மோகனூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.ந.மகேஸ்வரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஒருவந்தூா் கிராமத்தில் பாதிப்பு இடங்களை ஆய்வு செய்த அவா், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த காலங்களில் மழைக் காலத்தி;ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். கரோனா நோய்த்தொற்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் கேட்டுக் கொண்ட அவா், தடுப்பூசி செலுத்தாதவா்கள் உடனடியாக செலுத்துமாறு அறிவுரை வழங்கினாா்.

அதன்பின் மோகனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதைப் பாா்வையிட்டு, மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் நிவாரண முகாம்கள், திருமண மண்டபங்கள் தயாா் நிலையில் உள்ளது குறித்து வட்டாட்சியரிடம் கேட்டறிந்து உறுதி செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, மோகனூா் வட்டாட்சியா் சண்முகவேல், துணை வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.