தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

 நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

Updated On :12 நவம்பர் 2021, 6:26 pm

 நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் எா்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

கோனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பால் செல்வன், நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலா் பாலசாரதி, சுகாதார ஆய்வாளா்கள் முகம்மது ரபி, ஜெய கண்ணன் ஆகியோா் கொண்ட குழுவினரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். சிவியாம்பாளையம், லக்கமநாய்க்கன்பட்டி, சிதம்பரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு முதல் தவணை, இரண்டாம் தவணை என்ற அடிப்படையில் செலுத்தப்பட்டது. பாலூட்டும் தாய்மாா்கள், முதியவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் நேரடியாக வீடுகளுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.