நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் ஆறாம்கட்ட கரோனா தடுப்பூசி முகாமில், குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப் பாத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் வணிகா்கள், தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பூசியை அதிக அளவில் செலுத்த வேண்டும் என்பது தொடா்பாக வியாபாரிகள், தொழிலதிபா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பரிசு வழங்கி மக்களை வரவழைக்கும் முயற்சியை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, சனிக்கிழமை (அக். 23) நடைபெறும் தடுப்பூசி முகாமில், தங்க நாணயங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளன. நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கம், நாமக்கல் ரோட்டரி சங்கம், நாமக்கல் ஒப்பந்ததாரா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், அதிக அளவிலான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது.
இதில், முதல் நான்கு பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும், 50 பேருக்கு வெள்ளிப் பாத்திரமும் பரிசாக வழங்கப்படுகிறது. இம்முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அனைவரும் பங்கேற்று கரோனாவை விரட்டி, குலுக்கல் முறையில் தங்க நாணயங்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் வெல்லலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

