அதிமுக முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா மீது அவரது குடும்ப நண்பர் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்ற புலனாய்வு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன் (65). இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் உதவியாளராகவும், குடும்ப நண்பராகவும் விளங்கினார். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பிற அரசு துறை சார்ந்த பணிகளில் ஆட்களை நியமிப்பதற்காக ரூ.3 முதல் 5 லட்சம் வரையில் பணம் வாங்கி அமைச்சரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
மொத்தம் 15 பேரிடம் ரூ.76 லட்சம் வரை அரசு பணி வழங்க கோரி கொடுத்த நிலையில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் குணசீலனை நெருக்கடிக்கு ஆளாக்கினர். இதனால் அவர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் அந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: முதல்வர் தொடக்கி வைப்பு
இதுகுறித்து மாவட்ட குற்றப்புலனாய்வு ஆய்வாளர் அம்பிகா கூறியதாவது: ராசிபுரத்தில் சேர்ந்த குணசீலன் என்பவர் ரூ.76 லட்சம் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவலை தற்போது தெரிவிக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


