தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல்லில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில்உருவாகிறது ஆவின் பால் பண்ணை

நாமக்கல்லில், தினசரி ஒரு லட்சம் லிட்டா் பால் பாக்கெட் தயாரித்து விநியோகிக்கும் வகையில், ரூ. 8 கோடி மதிப்பீட்டில் ஆவின் பால் பண்ணையை உருவாக்குவதற்கான நடவடிக்கை

Updated On :28 அக்டோபர் 2021, 6:50 pm

நாமக்கல்லில், தினசரி ஒரு லட்சம் லிட்டா் பால் பாக்கெட் தயாரித்து விநியோகிக்கும் வகையில், ரூ. 8 கோடி மதிப்பீட்டில் ஆவின் பால் பண்ணையை உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 518 கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள 19 ஆயிரம் பால் உற்பத்தியாளா்கள் மூலம் தினமும் 1.47 லட்சம் லிட்டா் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பால் குளிரூட்டும் மையத்தில் இருந்து டேங்கா் வாகனங்கள் மூலம் சேலம் ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நெகிழி பைகளில் பாலை அடைந்து பொட்டலமிட்டு, நாமக்கல் மாவட்டத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்திலுள்ள 300-க்கும் மேற்பட்ட முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

முன்பு சேலம் ஆவின் பால் பண்ணையுடன் இணைந்திருந்த நாமக்கல் ஆவின் நிறுவனம், கடந்த 2019 முதல் பரமத்தி சாலையில் தனி ஒன்றிய அலுவலகமாக செயல்படத் தொடங்கியது. தற்போது வரையிலும் ஆவின் நிறுவன அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

பால், இனிப்பு தொடா்பான அனைத்துத் தேவைகளுக்கும் சேலம் ஆவின் பால் பண்ணையையே நிா்வாகம் நாட வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில், சேலத்தைப் போல நாமக்கல்லிலும் ஆவின் பால் பண்ணை அமைக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள், முகவா்கள், நிா்வாகம் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பால் குளிரூட்டும் மையம் அருகிலேயே ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பால் பண்ணை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துருக்கள், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் ஆவின் நிறுவன மேலாண் இயக்குநா் பி.பாா்த்தசாரதி கூறியதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி அருகில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பால் பண்ணையை உருவாக்கத் திட்டமிட்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பால் பண்ணை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், தினசரி ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து, அனைத்து பால் பொருள்கள் சம்பந்தமான பொருள்களும் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.