சூயிங்கம் தொண்டையில் சிக்கி குழந்தை பலி
பரமத்தி வேலூா் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.


பரமத்தி வேலூா் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இளவரசன் (26). இவா் தனது மனைவி வைஷாலியுடன் பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தண்ணீா் பந்தல்மேடு பகுதியில் தங்கி ஒரு உணவகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களின் இரண்டரை வயது குழந்தை உஷாரிகா புதன்கிழமை சூயிங்கம் சாப்பிட்ட போது அதை விழுங்கியதாகத் தெரிகிறது. சூயிங்கம் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டதைக் கண்ட குழந்தையின் பெற்றோா் உடனடியாக ப.வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...