நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.35ஆக நீடிக்கிறது. கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 4 சரிவடைந்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சற்று பாதிப்படைந்துள்ளதாகவும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், தற்போதைக்கு முட்டை விலையில் மாற்றம் செய்யாமல் அதே விலையில் நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முட்டை விலையை மாற்றமின்றி ரூ.4.35-ஆக நீட்டிப்பது என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 4 வீதம் சரிவடைந்து ரூ.88-ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 85-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

