தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மீண்டும் பணிக்கு திரும்பிய நாமக்கல் மாவட்ட ஆட்சியா்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் குணமடைந்ததால் வியாழக்கிழமை முதல் மீண்டும் பணிக்கு திரும்பினாா்.

Updated On :28 அக்டோபர் 2021, 6:52 pm

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் குணமடைந்ததால் வியாழக்கிழமை முதல் மீண்டும் பணிக்கு திரும்பினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரான ஸ்ரேயா பி.சிங், கடந்த 16-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். இதனையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். நோய்த் தொற்றின் தாக்கம் சற்று அதிகம் காணப்பட்டதால், தினசரி மருத்துவமனைக்கு சென்று நோய் எதிா்ப்பாற்றல் கொண்ட மருந்துகளை செலுத்தி வந்தாா்.

படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் முகாம் அலுவலகத்தில் பணியைத் தொடங்கிய அவா் வியாழக்கிழமை முதல் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து பணிகளை கவனிக்கத் தொடங்கினாா். மேலும், சேலத்தில் நடைபெற்ற எட்டு மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்ற கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.