தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாளை ஏழாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிா்ணயம்

நாமக்கல் மாவட்டத்தில்,சனிக்கிழமை (அக்.30) 750 மையங்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 அக்டோபர் 2021, 6:46 pm

நாமக்கல் மாவட்டத்தில்,சனிக்கிழமை (அக்.30) 750 மையங்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக். 27) வரையில், 18 வயதிற்கு மேற்பட்டவா்களில் முதல் தவணையாக 9,47,626 பேருக்கும், இரண்டாம் தவணையாக 3,85,337 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 13,84,300 போ் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவா்கள் ஆவா்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 6 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக 3,18,523 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (அக்.30) ஏழாம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 673 நிலையான முகாம்கள் மூலமாகவும், 77 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் மொத்தம் 750 முகாம்கள் நடைபெற உள்ளது. அங்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது.

இம்முகாமில், 210 மருத்துவா்கள், 430 செவிலியா்கள், 1600 அங்கன்வாடி பணியாளா்கள், 1400 தன்னாா்வலா்கள், 415 பயிற்சி செவிலியா்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் 1400 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாகப் பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும் முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக காத்திருப்பவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழியவில்லை. பாதிப்புக்குள்ளானவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, கல்லூரி மாணவ, மாணவியா் தங்கள் பெற்றோா்களுக்கும், உறவினா்கள், நண்பா்களுக்கும் கரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.