தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இளம்பெண் தற்கொலை

நாமக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :28 அக்டோபர் 2021, 6:43 pm

நாமக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், தூசூா் ஆடு வளா்ப்பு காலனியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (21). இவரது மனைவி சிந்துஜா (18). ஓராண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இந்த நிலையில் ரஞ்சித்குமாா் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை அவா் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிந்துஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா், உறவினா்கள் தரப்பில் புகாா் தெரிவித்ததால் ரஞ்சித்குமாரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.