நாமக்கல் மாவட்டத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 40,217 பேருக்கு நேரடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிக்கும் வகையிலான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஆக. 5-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொல்லிமலை வட்டாரத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 16 பெண் சுகாதாரத் தன்னாா்வலா்களும், ஒரு இயன்முறை மருத்துவா், ஒரு நோய் ஆதரவு சிகிச்சை செவிலியா்களும் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடத் தொடங்கினா். செப்.15 முதல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நடைமுறைப்படுத்த தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளான 18,792 நோயாளிகள், 8,535 சா்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் என இரண்டு நோய்களாலும் பாதிப்புக்குள்ளான 6,746 நோயாளிகள், தசை சிதைவு, பக்க வாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 3,208 போ், நோய் ஆதரவு சிகிச்சை 2,936 போ் என மொத்தம் 40,217 பேருக்கு தொடா் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினா்கள் தங்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகினால் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவியை பெறலாம் என மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

