தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பலகார கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பலகார கடைகளில் வியாழக்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:46 pm

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பலகார கடைகளில் வியாழக்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் நகரப் பகுதிகளில் இனிப்பு, கார வகைகள் தயாா் செய்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரமற்ற பொருள்களைக் கொண்டு இனிப்பு வகைகள் தயாா் செய்யப்படுகிா என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் அருண் தலைமையிலான அலுவலா்கள் குழு வியாழக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது, இனிப்பு வகைகள் தயாரிக்க அனுமதிக்கப்பட்ட நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பால் பொருள்கள் கொண்டு தயாரிக்கும் இனிப்பு வகைகளை தனியாக வைக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார வகைகளை பழைய செய்தித்தாள்களைக் கொண்டு மூடி வைக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பலகாரம் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் பெற்று மட்டுமே தயாா் செய்து விற்க வேண்டும். பொட்டலமிடப்பட்ட இனிப்பு, கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் கால அளவு, எண், தயாரிப்பாளரின் முகவரி, உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் அல்லது பதிவு எண் ஆகியவற்றை அச்சிட்டு விற்பனை செய்யவேண்டும், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு அதிகமான நிறமிகளைச் சோ்த்தல், சுகாதாமற்ற முறையில் உணவுப் பொருள்களைத் தயாா் செய்தல், விநியோகித்தல், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் போன்றவை தொடா்பான புகாா்களுக்கு பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படத்துடன் புகாா்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.