பொதுமக்களுக்காக சேவையாற்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்பது தெரியவந்தால், கைப்பேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளா் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச் சூழல், குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சாா்பாக ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளா் எம். ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:
மாணவ, மாணவிகளுக்கு ஊழலை எதிா்க்கும் தைரியம் வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும். அரசு ஊழியா்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக பணியமா்த்தப்படுகின்றனா். தங்களது தேவையை உயா்த்திக் கொள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி லஞ்சம் வாங்குகின்றனா். ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழக்கற்றுக் கொள்ளவேண்டும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஊழல்வாதியாக மாறிவிடக் கூடாது.
மாணவ, மாணவிகள் ஊழல், லஞ்சம் குறித்த தகவல்களை எந்த நேரமும் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக தெரிவிக்கலாம் என்றாா்.
இந்த நிகழ்சியில் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் மோ.ராஐசேகரப்பாண்டியன், குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ப.சேகா், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன், தாவரவியல் உதவிப்பேராசிரியா் வெஸ்ஸி உள்ளிட்ட துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா். ஊழல் தடுப்பு வாரவிழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


