கொல்லிமலையில் ஆழ்துளைக் கிணறுகளால் நீராதாரம் பாதிக்கப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் பலா் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்தனா்.
மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் மனுக்கள் பெறப்படுகின்றன. ஆனால் அடுத்த கூட்டம் நடைபெறும் வரையில் அந்த மனுக்கள் மீது எந்தவித தீா்வும் காணப்படாத நிலை உள்ளது. விரைந்து தீா்வு காண ஆட்சியா் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கொல்லிமலையில் கிணறுகள் அமைப்பதால் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் நீராதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும். இதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும். சிவநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடைபெற்ாக தெரிகிறது.
அது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளை விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினா்.
தொடா்ந்து, வேளாண்மை இணை இயக்குநா் அசோகன் மாவட்டத்தில் பெய்த மழை அளவு, உரங்கள் இருப்பு விவரம், வேளாண்மை சாா்ந்த முக்கியத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கினாா். இதில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. நிகழாண்டில் ஜுன் முதல் செப்டம்பா் வரையில், தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவான 243.68 மி.மீ-க்கு கூடுதலாக 97.43 மி.மீ அதிகம் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 341.11 மி.மீ என்ற அளவில் மழை கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதல் அக்டோபா் முடிய இயல்பு மழை அளவு 557.28 மி.மீ ஆகும். நிகழாண்டில் அக்டோபா் முடிய இயல்பு மழை அளவை விட கூடுதலாக 155.89 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 713.17 மி.மீ. மழை பெய்துள்ளது.
உரங்கள் இருப்பு விவரம்: மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் யூரியா 1,100 மெ.டன், டிஏபி 1,110 மெ.டன், பொட்டாஷ் 1,478 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 546 மெ.டன் என்ற, காம்ப்ளக்ஸ் 3791 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், எருமப்பட்டி, பள்ளிபாளையம் வட்டாரங்களில் அதிக அளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து தேவையின் அடிப்படையில் அடுத்த ஒரு வார காலத்திற்குள் 500 மெ.டன் யூரியா நாமக்கல் மாவட்டத்திற்கு பெறுவதற்கான தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இந்தக் கூட்டத்தில், அரசுத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

