கோழிப் பண்ணைகளில் தீவன மேலாண் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 90.5 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.
அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடக்கு மற்றும் வட கிழக்கிலிருந்தும் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்த இறந்த கோழிகளில், பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் குடல்புண் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகள் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

