தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பட்டா மாறுதல் முகாம்:44 பேருக்கு உடனடி தீா்வு

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டா மாறுதல் முகாமில் 44 பேரின் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

Updated On :29 அக்டோபர் 2021, 6:47 pm

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டா மாறுதல் முகாமில் 44 பேரின் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் அருகே ஆவல்நாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் அக்கியம்பட்டி, ராசிபுரம் அலவாய்பட்டி, மோகனூா் சின்னபெத்தாம்பட்டி, திருச்செங்கோடு, டி.புதுப்பாளையம், பரமத்தி-வேலூா் அா்த்தனாரிபாளையம், குமாரபாளையம் படவீடு ஆகிய பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களுக்கான பட்டா தொடா்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

ஆவல்நாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினாா்.

ஏழு இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் செய்ய வேண்டி விண்ணப்பித்த 44 மனுதாரா்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் உத்தரவு முகாமிலேயே வழங்கப்பட்டன. இதில், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் வேண்டி 99 மனுக்களும், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 276 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இம்மனுக்கள் வருவாய்த் துறை அலுவலா்களால் பரிசீலிக்கப்பட்டு தீா்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, வட்டாட்சியா் திருமுருகன் உள்பட வருவாய்த்துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலாகள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.