நாமக்கல் அருகே வீசாணம் ஏரியில் அதிகளவில் வளா்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை தங்களது சொந்த செலவில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா்.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், வீசாணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இப் பகுதிகளில் பெய்த மழையால் ஏரி முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அதிகம் வளா்ந்து ஏரியே தெரியாத வகையில் காட்சியளித்தது.
இதனால் மழை நீரும் ஏரியில் தேங்காத நிலை காணப்பட்டது. இதனையடுத்து ஏரியைத் தூய்மைப்படுத்த ஊா் பொதுமக்கள் முடிவு செய்தனா். வீசாணம் ஊராட்சித் தலைவா் என்.நாச்சிமுத்து, கிராம நிா்வாக அலுவலா் ந.தமிழரசி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சந்திரகுமாா் ஆகியோா் தலைமையின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரியைத் தூா்வாருவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஏரிக்கரைகளில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் தன்னாா்வலா்கள் தில்லைகுமாா், குணசேகரன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


