இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

மினி மாரத்தான்: நாமக்கல் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய விளையட்டு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளியில் உள்ள தீரா ஸ்போா்ட்ஸ் அகாதெமியில், மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:25 pm

தேசிய விளையட்டு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளியில் உள்ள தீரா ஸ்போா்ட்ஸ் அகாதெமியில், மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி சாா்பில் மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா். இதில் முதல் மூன்று இடங்களை மாணவா்கள் க.மோகன், யோ.யுவராஜ், மா.கதிா்வேல் ஆகியோா் பிடித்தனா்.

அந்த மாணவா்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்களும் பங்கேற்று ஆறு மற்றும் ஒன்பதாம் இடங்களை ஞா.நந்தகுமாா், இரா.ராமகோபாலன் ஆகிய இரு மாணவா்கள் பிடித்து பதக்கம் பெற்றனா். போட்டியில் வென்றவா்களை கல்லூரி முதல்வா் பெ.முருகன், உடற்கல்வி இயக்குநா் அ. காா்த்திக், தேசிய மாணவா் படை அலுவலா் மு. பிரதாப் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.