ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மூச்சுக்குழல் அயற்சி நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு

பண்ணைகளில் மேல் மூச்சுக்குழல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2021, 6:12 pm

பண்ணைகளில் மேல் மூச்சுக்குழல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த வார வானிலையில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 72.5 டிகிரியாக நிலவியது. அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசானது முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவிலும் வீசும்.

சிறப்பு ஆலோசனை: பண்ணைகளில் இறந்த கோழிகளை கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் அவை மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, பண்ணையாளா்கள் கோழிப் பண்ணைகளில் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும், மழைக்காலம் நெருங்கி வருவதால் கோழிப் பண்ணை, தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரி செய்யவும், தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.