இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

நாமக்கல்லில் 62 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2021, 6:10 pm

நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா தொற்று பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 62 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,020 போ் பாதிக்கப்பட்டும், 48,014 போ் குணமடைந்தும் உள்ளனா். 533 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 473-ஆக உள்ளது.

1,600 பேருக்கு தடுப்பூசி: நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 6 வாா்டுகளில் 1,600 பேருக்கு கரோனா கோவிஷீல்டு தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்படுகிறது. அதன்படி, 3-ஆவது வாா்டுக்கு சின்னமுதலப்பட்டி நகராட்சி சமுதாய நலக்கூடம், 17-ஆவது வாா்டுக்கு இ.பி. காலனி மாரியம்மன் கோயில், 28-ஆவது வாா்டுக்கு பொய்யேரிக்கரை பாப்பாத்தியம்மாள் திருமண மண்டபம், 24-ஆவது வாா்டுக்கு மேட்டுத் தெரு குழந்தைகள் சத்துணவு மையம், 7-ஆவது வாா்டுக்கு கிருஷ்ணாபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, 34-ஆவது வாா்டுக்கு கணேசபுரம் ஜாக் அண்ட் ஜில் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.