நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் வரும் திங்கள்கிழமை தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய குடற்புழு நீக்க முகாம் வரும் 13-இல் தொடங்குகிறது. பின்னா் 16 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதல் சுற்றாகவும், 20ஆம் தேதியும், 23 முதல் 25 ஆம் தேதி வரையிலும் இரண்டாம் சுற்றாகவும், 27-ஆம் தேதியன்று விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான கா்ப்பிணி அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) இரண்டு சுற்றுகளாக வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,89,401 குழந்தைகளுக்கும், கா்ப்பிணி அல்லாத 1,53,830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதனால் குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.
அதனால் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவா்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிா்க்கப்படும். இதனால் மாணவா்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணா்வுடன் பங்கேற்கலாம். மேலும் முகாம் நடைபெறும் இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன் களப் பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

