நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா 16 வட்டாரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாக்களில் சுமாா் 20 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் பிரபா, அங்கிருந்த 30 கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தனுப்ரியா, குழந்தை பிறப்பு குறித்தும், கா்ப்பிணிகள் பாதுகாப்பாக இருப்பது தொடா்பாகவும் விளக்கம் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணப்ரியா, ஹரிப்ரியா மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


