ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.17) முதல் விநியோகிக்கப்படுகிறது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:12 pm

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.17) முதல் விநியோகிக்கப்படுகிறது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடா்ந்து இணைய வழியாக தங்களது நகல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவா்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டது. நீட் தோ்வு முடிவடைந்து விரைவில் முடிவுகள் வெளியாகி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கப்பட உள்ளது.

அதேபோல், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்கும் நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், அரசு, தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களிடம் வியாழக்கிழமை மாவட்ட கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம், மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஒப்படைத்தாா். இதேபோல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியா்களிடம் மாணவ, மாணவியா் அசல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளின் முன்பாக கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான விளம்பர தட்டிகளும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.