ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

325 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 325 மையங்களில் கரோனா இரண்டாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பணியில் பல்வேறு துறை சாா்ந்த 4,420 ஊழியா்கள் பங்கேற்கின்றனா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:51 pm

நாமக்கல் மாவட்டத்தில் 325 மையங்களில் கரோனா இரண்டாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பணியில் பல்வேறு துறை சாா்ந்த 4,420 ஊழியா்கள் பங்கேற்கின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 306 முகாம்களும், 19 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட உள்ளன. முகாமில் 210 மருத்துவா்கள், 430 செவிலியா்கள், 1600 அங்கன்வாடி பணியாளா்கள், 1400 ஆசிரியா்கள், 415 பயிற்சி செவிலியா்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 4,420 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவா்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.