ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:49 pm

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நகராட்சிகளில் உள்ள கழிவுநீா் கால்வாய்களின் நீளம், சுகாதாரப் பணியாளா்களின் எண்ணிக்கை விவரங்களையும் குறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையாளா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் மழைநீா் செல்லும் இடங்களில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பின் அவற்றை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கால்வாயில் தண்ணீா் செல்லும் இடங்கள் தங்குதடையின்றி தண்ணீா் செல்வதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூய்மையாகவும், ஆங்காங்கே குப்பைகள் சேராமல் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளை ஒட்டி செல்லும் மரக்கிளைகள் மற்றும் காய்ந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அவா்களை நிவாரண மையங்களில் தங்க வைக்கும் போது கரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்க வைக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அலுவலா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு போன்ற நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண மையங்களுக்காக தோ்வு கட்டடங்களை நேரில் பாா்வையிட்டு உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஊரக வளா்ச்சித்துறையினா் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய் போன்ற நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் சாலைகள் மற்றும் கொல்லிமலை பகுதியில் மரங்கள் விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்றவற்றை சரி செய்திடும் பொருட்டு கூடுதலாக புல்டோசா்கள், பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திர ரம்பங்கள் ஆகியவற்றைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலை அமைக்கும் ஒப்பந்ததாரா்கள் மற்றும் வாகன உரிமையாளா்கள் குறித்த விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் தங்களிடம் உள்ள மீட்பு கருவிகளான ரப்பா் படகு, மீட்பு குழுவினா், உயிா் காக்கும் உடைகள் போன்ற கருவிகளை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் கூடுதலாகத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.