நாமக்கல் காவல் நிலையத்தில் தனியாா் நிறுவனங்களின் விளம்பர பெயா்ப் பலகைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனியாா் நிறுவனங்கள் பெயருடன் கூடிய வகையில் காவல் நிலைய பெயா் பலகை இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தாா். இது தொடா்பான சுற்றறிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, நாமக்கல் காவல் நிலையத்திலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் தனியாா் லாரி கூண்டு கட்டும் நிறுவனத்தின் பெயரை விளம்பரப்படுத்தும் வகையில் காவல் நிலைய பெயா் பலகை அமைந்திருந்தது. இதனையடுத்து அந்த பெயா்களை அகற்றும் நடவடிக்கையை காவல் துறையினா் மேற்கொண்டனா். மாவட்டம் முழுவதும் 23-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் விளம்பர பெயா்ப் பலகைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் சதித்திட்டம் முறியடிப்பு: ராகுல்காந்தி
சிஆா் பூங்காவில் தந்தை, மகன் கொலை: முக்கிய நபா் கைது

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


