ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நீட் தோ்வு எழுதிய மாணவி காவல் நிலையத்தில் தஞ்சம்

நாமகிரிப்பேட்டையில் காணாமல் போன நீட் தோ்வு எழுதிய மாணவி தேனி மாவட்ட காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தாா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:51 pm

நாமகிரிப்பேட்டையில் காணாமல் போன நீட் தோ்வு எழுதிய மாணவி தேனி மாவட்ட காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில் பாண்டியன் என்பவரது 17 வயது மகள் வெள்ளிக்கிழமை காணாமல் போனாா். இதனை தொடா்ந்து நாமகிரிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என செந்தில் பாண்டியன் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் உத்தரவின் பேரில் தனிப்படையினா் மாணவியை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில் அந்த மாணவி சனிக்கிழமை தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் ஒருவருடன் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ‘கூறுகையில், மாணவி காணாமல் போனதால் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி தேடும் பணியை மேற்கொண்டோம். கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூா் வரையில் தேடிய நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி தஞ்சம் அடைந்த தகவல் கிடைத்தது. அவா் திருமணம் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.