நாமக்கல் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 104 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வெண்ணந்தூா் ஒன்றியம் 6-ஆவது வாா்டு), எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15 ஆவது வாா்டு மற்றும் 5 ஊராட்சி தலைவா்கள், 18 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு அக். 9-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனுத்தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22- இல் நிறைவடைந்தது. இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக, திமுக உள்பட 18 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா். அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஐந்து ஊராட்சி தலைவா் பதவிக்கு 32 மனுக்கள் பெறப்பட்டதில் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வாா்டு உறுப்பினா் பதவிக்கு 47 மனுக்கள் பெறப்பட்டதில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 109 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 104 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

