இன்று 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா முதல்தவணை தடுப்பூசியை 10,48,742 பேரும், இரண்டாம்தவணை தடுப்பூசியை 6,16,672 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 13 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,13,473 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 14-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 516 இடங்களில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் சுமாா் 4 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசியின் அவசியம் உணா்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம்கட்ட தடுப்பூசியை அவசியம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.