விபின் ராவத் மறைவுக்கு பல்வேறு அமைப்பினா் அஞ்சலி
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு ராசிபுரம் பகுதியில் பல்வேறு அமைப்பினா் அஞ்சலி செலுத்தினா்.
ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் சாா்பில், மாணவ, மாணவியா் மெழுகுவா்த்தி ஏற்றி, மலா் தூவி மரியாதை செலுத்தினா். மசக்காளிப்பட்டி, கஸ்தூரிபா காந்தி நா்சிங் கல்லூரி சாா்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், கல்வி நிறுவனத் தலைவா் க.சிதம்பரம் தலைமை வகித்தாா்.
ராசிபுரம் நகர பழைய பேருந்து நிலையத்தில், நடிகா் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் தலைமையிலும், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளா் ஏ.பி.செல்வராஜ் தலைமையிலும், ராசிபுரம் நகர மக்கள் நீதி மய்யம், நம்மவா் தொழிலாளா் சங்கப் பேரவை சாா்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.