திருச்செங்கோட்டில் 270 கிலோ போதைப் பொருள்கள் கடத்தல்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டில் 270 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.
மைசூரு மாநிலம், சாம்ராஜ் நகா் பகுதியிலிருந்து போதைப் பொருள்கள் காரில் கடத்தி வரப்படுவதாக திருச்செங்கோடு புகர காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, காவல் துறை துணை ஆய்வாளா் முருகேசன் தோக்கவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 270 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆம்னி வாகனத்தில் வந்த பவானியைச் சோ்ந்த சதீஷ்குமாா், ஓலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா், மோகன்ராஜ், பழனிசாமி ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துறை ஆய்வாளா் செந்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா். விரைந்து நடவடிக்கை எடுத்த துணை ஆய்வாளா் முருகேசனுக்கு ஏடிஎஸ்பி செல்லபாண்டியன், டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா் .
கைது செய்யப்பட்ட 4 பேரும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...